Kamal Haasan's reply on joining with Rajini

ரஜினியுடன் இணைவது எப்போது – கமல் ஹாஸன்

சென்னை: ரஜினியுடன் கூட்டணி இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது என நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் எழுதிய கட்டுரையில் நடிகர் ரஜினியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது: ரஜினியுடன் இணைவது என்பது இப்போது எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

நானும் ரஜினியும் கூட்டணி வைப்பது தேவையா என்பது குறித்து இருவருமே யோசிக்க வேண்டும் இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்க்கவேண்டும்.

அரசியல் ரீதியாக எனக்கு ஏற்படுட்டுள்ள சந்தேகங்களுக்கு கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தீர்த்து வைக்கிறார், என்று கூறியுள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!