களத்தில் குதிக்கிறார் கமல் ஹாஸன்... ஜன 26 சுற்றுப் பயணம் அறிவிப்பு! - VanakamIndia

களத்தில் குதிக்கிறார் கமல் ஹாஸன்… ஜன 26 சுற்றுப் பயணம் அறிவிப்பு!

சென்னை: ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என கமல் ஹாஸன் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபடுவதில் உறுதியாக இருக்கிறார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கெனவே அவர் கேரள முதலவர் பிரணாயி விஜயன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

கடந்த மாதம் 7-ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றை அறிவித்தார். ஆனால் இன்னும் அது நடை முறைக்கு வரவில்லை.

அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!