உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ரஜினியின் கபாலி! - VanakamIndia

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ரஜினியின் கபாலி!

கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் வசூலைக் குவித்து வெற்றிப் பெற்ற ரஜினியின் கபாலி படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஆனால் தமிழில் அல்ல… மலையாள தொலைக்காட்சியில்.

ஆசியா நெட் தொலைக்காட்சியில் கபாலி படத்தை தீபாவளியன்றே ஒளிபரப்புவதாக அறிவிப்பு வெளியாகிவருகிறது. பிறகுதான் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமாம்.

மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும், கபாலியின் தமிழ் பதிப்பைத்தான் ரசிகர்கள் பார்க்கவிருக்கிறார்கள். காரணம் கபாலி கேரளாவில் நேரடித் தமிழ்ப் படமாகத்தான் வெளியானது.

இதுவரை கேரளாவில் வேறு எந்தப் படமும் குவிக்காத பெரும் வசூலைக் குவித்தது கபாலி.

மீண்டும் கபாலியை, அதுவும் தங்கள் வீட்டு வரவேற்பறையிலேயே காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது தமிழ், மலையாள ரசிகர்களுக்கு.

Superstar Rajinikanth’s blockbuster movie Kabali will be telecast in tv on the day of Diwali.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!