தந்தை பெரியார் 138வது பிறந்த நாள்.. முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மரியாதை! - VanakamIndia

தந்தை பெரியார் 138வது பிறந்த நாள்.. முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி மரியாதை!

periyar

சென்னை: பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன், இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சீர்திருத்தவாதி எனப் புகழப்படும் தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பெரியாரின் திருவுருவப் படத்துக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி

அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோரும் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!