ஆமா... ஜெயலலிதா உடல் நிலை குறித்து பொய்தான் சொன்னோம்! - அப்பல்லோ பிரதாப் ரெட்டி பகீர் - VanakamIndia

ஆமா… ஜெயலலிதா உடல் நிலை குறித்து பொய்தான் சொன்னோம்! – அப்பல்லோ பிரதாப் ரெட்டி பகீர்


 

சென்னை: உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள். நாங்கள்தான் காய்ச்சல் என்று பொய் சொன்னோம் என்று அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி. ரெட்டி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “ஜெயலலிதாவை உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் அப்பல்லோ மருத்துவமனைக்குகே கொண்டு வந்தனர். அன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை.

தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமி‌ஷன் நடைபெற்று வருவதால் அதுபற்றி மேலும் பேச முடியாது. எங்கள் மருத்துவமனை மருத்துவர்களுக்கு விசாரணை கமி‌ஷனில் இருந்து சம்மன் வந்துள்ளது. எனக்கு சம்மன் வரவில்லை,” என்றார்.

-வணக்கம்இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!