அவனியாபுரத்தில் இன்று உற்சாகமாகத் தொடங்கியது ஜல்லிக்கட்டு! - VanakamIndia

அவனியாபுரத்தில் இன்று உற்சாகமாகத் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தை முதல் நாளான இன்று (ஜனவரி 14) ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் 964 காளைகளும், 623 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வழங்க பரிசுகளாக மோட்டார் பைக், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடக்கும் இப்போட்டியை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முன்னதாக கலெக்டர் வீரராகவ ராவ் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க, வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இன்று முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டியுள்ளன.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!