வங்கி தகிடுதத்தங்கள்... மோடி அரசுக்கு மண் அள்ளிப் போடும் காலம் நெருங்குகிறது! - VanakamIndia

வங்கி தகிடுதத்தங்கள்… மோடி அரசுக்கு மண் அள்ளிப் போடும் காலம் நெருங்குகிறது!

வங்கி டெப்பாசிட் பற்றி பலவித சிக்கல்கள் உருவாகுவதாக செய்திகள் சொல்கின்றன‌.
அதாவது இனி வங்கிகளில் டெப்பாசிட் செய்யபடும் பணங்களுக்கு பாதுகாப்பு இல்லையாம், வங்கி கொடுத்தால் வாங்கிகொள்ளலாமாம் இல்லை என்றால் காத்து இருக்க வேண்டுமாம், வங்கிக்கு முழு உரிமை அளிக்க போகின்றார்களாம் இது தொடர்பான சட்டம் வரபோகின்றதாம்.

அதாவது இனி வங்கிகள் நாம் கேட்டவுடன் நமது பணத்தை தர அவசியமில்லையாம், எப்பொழுது முடியுமோ அப்பொழுது கொடுக்கலாமாம்.

வடிவேல் ஒரு படத்தில் சைக்கிள் நிறுத்தும்பொழுது வாடகை தருவேன் என சொல்லி சைக்கிளிலே சுற்றுவார் அல்லவா? அப்படி இனி வங்கிகளும் சுற்ற அரசு அனுமதி அளிக்க போகின்றதாம்.
பணத்தை கொடுத்து வைத்துவிட்டு பின் வாங்கிகொள்ள பக்கத்து தெரு மளிகைகடைகாரன் போதாதா? வங்கிகள் எதற்கு?

இப்பொழுதெல்லாம் ஏன் இப்படியான நெருக்குதல்கள் என யோசித்தோமா? வீட்டிலும் பணம் வைக்க முடியாது, ஒரே இரவில் செல்லாதது ஆக்கிவிட்டால் அவ்வளவுதான் தங்கத்தில் சேமிக்க கட்டுப்பாடு, நிலத்திலும் இனி போடமுடியாது அதற்கும் கட்டுப்பாடு, அடுத்த விஷயம் வங்கி இந்த மூன்றும்தான் இந்தியர்கள் பணம் அதிகம் சேமிக்கும் இடம். இதில் கைவைத்தால் சேமிப்பிற்கு வேறு இடம் தேடி ஓடுவார்கள்.

எங்கு ஓடுவார்கள்? காப்புறுதி, பங்கு சந்தை அல்லது வெளிநாட்டு சொத்துக்கள் என ஓடுவார்கள், அல்லது சேர்க்க முடியா நாட்டில் அனுபவிக்கலாம் என கார் முதல் எல்லா அசையும் சொத்துக்களில் இறங்குவார்கள்.

இதனால் யாருக்கு லாபம்?

நிச்சயம் வெளிநாட்டு கம்பெனிகளுக்குத்தான் லாபம். ஏற்கனவே தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இங்கு வந்தாயிற்று, இன்னும் பல விஷயங்களில் ஓசைபடாமல் வெளிநாட்டு நிறுவணம் வந்தாயிற்று
இந்திய கார் கம்பெனி என ஒன்றுகூட இல்லை.

ஆக இம்மாதிரி மிரட்டல்கள் எல்லாம் எதற்காக என்றால் சேமிப்பு பழக்கம் அதிகம் உள்ள இந்தியர்கள் சேமிக்க அஞ்சவேண்டும், அப்படி சேமித்தாலும் செலவழித்தாலும் அப்பணம் வெளிநாட்டுக்காரனுக்கே செல்லவேண்டும் என்ற பெரும் நுட்பமான திட்டங்கள். இந்த அரசு அந்த திட்டங்களுக்குத்தான் துணைபோகின்றது.

பழனிச்சாமி அரசு மோடிக்கு அடிமை என்றால் மோடி அரசு யாரோ வெளிநாட்டுகாரனுக்கு அடிமை.

ஆக இந்தியர்களே நீங்கள் இனி பணம் சேர்க்கவே கூடாது, விடவே மாட்டோம். சேமிப்பு என்பதை பற்றி இனி நினைத்துப் பார்க்கவே கூடாது என்ற ரீதியில் சென்றுகொண்டிருக்கின்றது இந்திய அரசு.

இந்தியர்களின் தனிபெரும் குணமான சேமிக்கும் வழக்கத்தை பயமுறுத்தி தகர்த்து அதனை யாருக்கோ சாதகமான வழியில் திருப்பிட முயலும் இந்த அரசின் திட்டங்கள் மகா கண்டனத்துக்குரியவை.

இவை எல்லாம் மிக பெரும் பின்னடைவினை கொண்டுவரும். ஏற்கனவே மோடி அரசினை திட்டிக்கொண்டிருக்கும் மக்கள், தெருவில் இறங்கி மண் அள்ளிப் போடும் காலம் வந்துகொண்டிருக்கின்றது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!