விண்ணில் பாய்ந்த ஜி-சாட் 9 ‘ தெற்காசிய சாட்லைட்’... இஸ்ரோவின் புதிய சாதனை! - VanakamIndia

விண்ணில் பாய்ந்த ஜி-சாட் 9 ‘ தெற்காசிய சாட்லைட்’… இஸ்ரோவின் புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் இலங்கை என ஆறு நாடுகள் பயனடைக்கூடிய புதிய ஜி-சாட் 9 சாட்லைட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சாட்டிலைட் 2230 கிலோ எடை கொண்டது.

தொலைதொடர்புக்கான 12 கே யு ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுட்காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும்

பாகிஸ்தான் தவிர தெற்காசிய நாடுகள் அனைத்தும் இந்த சாட்டிலைட்டை உபயோகப்படுத்த உள்ளனர்.

ஓவ்வொரு நாடும் தனித்தனி அலைவரிசையில் ஒளிபரப்பலாம் அல்லது இயற்கை பேரிடர்களை கண்டறிந்து முன் நடவடிக்கைகள் எடுக்க பயன்படுத்தலாம்.

ஒரே சாட்டிலைட்டின் மூலம் பல நாடுகளுக்கான தேவைகளை பெறக்கூடிய அளவில் இந்த சாட்டிலைட் வடிவமைக்கப் பட்டுள்ளது முக்கிய அம்சமாகும்.

இந்திய வின்வெளி ஆராய்ச்சியின் முக்கிய மைல்கல்லாகவும் விளங்குகிறது. இந்த சாட்லைட்டை உருவாக்க்அ 235 கோடி செலவானது. ராக்கெட் ஏவுவுதற்கான செலவுகளையும் சேர்த்து 440 கோடி மொத்த செலவாகும்.

தெற்காசிய நாடுகளுக்கு பலன் அடையும் வகையில் உருவாக்கப்பட்டு, விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளதால், இது தெற்காசியா சாட்டிலைட் என்றும் அழைக்கப்படுகிறாது.

Indian Space Research Organization(ISRO) successfully launched G-SAT 9 or South Asia Satellite weighing 2230 KGs. It will serve India, Afghanistan, Nepal, Bhutan and Srilanka.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!