வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்... ஈராக்கில் கடைசி நகரத்தையும் கைப்பற்றியது அமெரிக்கப் படை! - VanakamIndia

வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்… ஈராக்கில் கடைசி நகரத்தையும் கைப்பற்றியது அமெரிக்கப் படை!

ராவா(ஈராக்): ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆக்கிரமிப்பிலிருந்த கடைசி நகரத்தையும் அமெரிக்க – ஈராக் படைகள் மீட்டனர். ஈராக்கில் 34 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கையகப்படுத்தி தனி நாடு போல் ஆட்சி அதிகாரம் செலுத்தி வந்தார்கள். அதேபோல் சிரியாவிலும் பல நகரங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

அமெரிக்கப் படைகளும் ஈராக் ராணுவமும் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முற்றிலும் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். நகரங்கள் அனைத்தும் மீண்டும் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. பல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

சிரியாவிலும் அனைத்து நகரங்களும் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஐஎஸ்ஐஎஸ்-க்கு தற்போது எந்த நிலப்பரப்பும் இல்லை. ஆனாலும் அவர்களின் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வில்லை என்றே கூறப்படுகிறது. மறைமுகத் தாக்குதல்கள், மக்கள் பகுதிகளில் தீவிரவாதம் என வேறு வகையில் தொடரும் என நம்பப்படுகிறது. அமெரிக்க ராணுவம் தொடர்ந்து ஈராக், சிரியாவில் முகாமிட்டு இருக்கும் என்று பெண்டகன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!