Is this Kamal's Punch to Rajini?

வெத நான் போட்டது… ரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்?


அப்படித்தான் ஒரு யூகம் போய்க்கொண்டிருக்கிறது. மலேசியாவில் நடந்த நட்சத்திர விழாவில் இறுதி நிகழ்வாக கமல், ரஜினியிடம் விவேக் பேட்டி எடுத்தார்.

கமலிடம், “நீங்கள் பேசி நடித்த வசனங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த வசனம் எது?” என்று விவேக் கேட்டார். அதற்கு கமல், “சிவாஜியின் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான். நான் எழுதி அவர் பேசிய ‘வெத நான் போட்டது…’ என்ற வசனம் தான் எனக்கு பிடித்தது,” என்றார்.

கேள்வி கமல் பேசிய வசனத்தில் இருந்து என்று இருக்க ஆனால் கமல் சிவாஜி பேசிய வசனத்தை குறிப்பிட்டதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்தபிறகு கடந்த ஒரு ஆண்டாக அரசியல் பக்கம் ஆர்வம் காட்டுகிறார் கமல். ட்விட்டரில் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். விஷால் தேர்தல் களத்தில் நேரடியாக குதித்ததும் அதிர்ச்சியடைந்து தனது அரசியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

பத்து நாட்களுக்கு முன்னர் ரஜினி புதுக்கட்சி தொடங்கப்போவதாக அறிவிக்கவே இப்போது எல்லோரும் ரஜினி அரசியலை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். அதற்கு பன்ச்சாகத்தான் கமல் இந்த வசனத்தை அழுத்தி குறிப்பிட்டுள்ளார் என்று பேச்சு அடிபடுகிறது.

ஆனால் கமல் 2017ல்தான் அரசியலுக்குள் நுழைந்தார். அதுவரை ஓட்டுப்போட விரலில் மை வைப்பவர் எல்லாம் அரசியல்வாதிதான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் ரஜினியே 1996 இல் இருந்தே நேரடியாக அல்லது மறைமுகமாக அரசியல் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Public guessed that Kamal has indirectly punched Rajini’s politics in his interview in Malaysian star function.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!