ராகுல் காந்திக்குப் பயப்படுகிறதா பாஜக? உபி கலவர இடத்திற்குச் செல்லத் தடை! - VanakamIndia

ராகுல் காந்திக்குப் பயப்படுகிறதா பாஜக? உபி கலவர இடத்திற்குச் செல்லத் தடை!

சாஹன்பூர்: உத்தர பிரதேச சாஹன்பூரில் வீடுகளுக்கு தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம், மேலும் வன்முறையை தூண்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மாயாவதி சென்றார். அதை பாஜகவினர் கண்டித்தனர். அடுத்து ராகுல் காந்தி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி ராகுல் சென்று பார்வையிட்டு வந்தார். அடுத்து அகிலேஷ் யாதவும் சென்றார்.

எதிர்க் கட்சியினரின் வருகை பாஜகவுக்கு கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. கலவரத்தை யோகி அரசு அடக்கத் தவறிவிட்டது என்று ராகுல் குற்றம் சுமத்தியிருந்தார்.

ராகுலின் வருகை மக்களிடம் அரசு மீதான் அதிருப்தியை அதிகப்படுத்தும் எனக் கருதிய பாஜக ராகுலை கடுமையாக சாடியுள்ளனர்.

“அரசியல் சுற்றுலா வருவதற்கு உபி இடம் இல்லை.. யோகி அரசு யாரையும் அரசியல் சுற்றுலா வருவதற்கு அனுமதிக்காது.

போட்டோ ஆசை பிடித்தவர் ராகுல், போட்டோ எடுத்துப் போட்டு ஏதோ மக்களுக்கு நல்லது செய்வது போல் வேடம் போடுவதற்காகவே போட்டோ எடுக்க வருகிறார்,” என்று பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உலகத்தின் எந்த மூலையில், எந்த தலைவரைச் சந்தித்தாலும், தனது கண்களும் முகமும் முழுசா கேமராக் காரரை நோக்கி இருப்பது எந்த தலைவர் என்று சாமானியருக்கும் தெரியுமே!

பாஜகவினர் ராகுலை போட்டோ ஆசை பிடித்தவர் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

English Summary:

Is BJP afraid of Rahul Gandhi. Rahul was banned for visiting Sahanpur where there are riots and Rahul visited the victims despite of the ban. BJP says Rahul can not be allowed as political tourists in to UP. Also they blamed him as photo opportunist

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!