ஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆனது - VanakamIndia

ஈரான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 450 ஆனது

டெஹ்ரான்: ஈரான்-ஈராக் நாடுகளுக்கிடையே எல்லையில் ஜக்ரோஸ் மலைப் பிரதேசத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது.

இந்த நிலநடுக்கத்தால் குழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர். எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.

ஈரானின் சர்போல் –இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு ஈரானில் ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!