அதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி! - VanakamIndia

அதிரடி ஆஃபர்களை அள்ளிவிட்ட அமேசான்.. ரூ.10,000/- வரை தள்ளுபடி!


ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் இந்தியாவில் சில அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. நேற்று துவங்கிய இந்த ஆஃபர் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. அதன்படி, பல ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.10,000 வரை தள்ளுபடி கொடுத்து ஸ்மார்ட்போன்களின் விலையை இந்நிறுவனம் குறைத்திருந்தது.

ஆண்ட்ராய்டு மொபைலுக்கு ரூ.2,500 வரை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல், சாம்சங் கேலக்ஸி ஆன்8, மோட்டோ ஜி4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.12,990 மற்றும் ரூ.11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மோட்டோ எக்ஸ் போர்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, இது ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளுக்கும்…

மேலும், ஆப்பிள் நிறுவன மொபைலுக்கும் அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 பிளஸ் 128 ஜிபி ரூ.82,000-இல் இருந்து 10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.71,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதே போல் 32 ஜிபி பிளாக் மாடல் வாங்கும் போதும் ரூ,.10,000 குறைக்கப்பட்டு ரூ.61,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று துவங்கிய அமேசான் சிறப்பு விற்பனை இன்றுடன் (மார்ச் 30-ந்தேதி) நிறைவு பெற்றது. மக்கள் பலர் இந்த அரிய வாய்ப்பை அதிகமாகவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *