வரும் சனிக்கிழமை டல்லாஸில் இந்தியத் தூதரகத்தின் பாஸ்போர்ட், விசா முகாம்! - VanakamIndia

வரும் சனிக்கிழமை டல்லாஸில் இந்தியத் தூதரகத்தின் பாஸ்போர்ட், விசா முகாம்!

டல்லாஸ்(யு.எஸ்) ஹூஸ்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் சார்பில் பாஸ்போர்ட், விசா முகாம் டல்லாஸில் நடைபெற உள்ளது. நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, ஃப்ரிஸ்கோ, ஹனுமன் கோவில் வளாகத்தில் இந்த முகாம் நடைபெறும் என்று ஹூஸ்டன் இந்திய தூதரக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட், விசா, ஓசிஐ கார்டுகள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இந்திய பாஸ்போர்ட்டுகளை திருப்பி வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் முகாமுக்கு எடுத்து வரலாம். ஹூஸ்டன் இந்திய தூதரகத்திலிருந்து வருகை தரும் அதிகாரிகள், விண்ணப்பங்களையும் ஆவணங்களையும் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஹூஸ்டன் காக்ஸ்&கிங்க்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.அர்கான்சா, கான்சஸ், லூசியானா, ஓக்லஹோமா, டெக்சாஸ், நியூ மெக்சிகோ, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் ஹூஸ்டன் இந்தியத் தூதரக எல்லைக்குட்பட்ட பகுதிகளாகும்.

நேரடியாக அதிகாரிகளுடன் விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து ஒப்புதல் பெறுவதன் மூலம் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

வடக்கு டெக்சாஸ், ஒக்லஹோமா சிட்டி, தல்சா, பெண்டன்வில் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு டல்லாஸ் முகாம் மூலம் பலனடையலாம்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Houston Indian Consulate is conducting a camp in Frisco TX on November 18, Saturday at KaryaSiddhi Hanuman Temple complex between 9:30 am to 4:30 pm. OCI cards, Passport renewal, visa related applications and documents will be reviewed and approved by the consulate officers.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!