ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா! - VanakamIndia

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சீராக ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி அதே சீரான வேகத்தில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வந்தது.

கடைசியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்தது. 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரஹானே மற்றும் ரோகித் ஷர்மா, 124 ரன்களில் தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தனர். ரஹானே 61 ரன்களும், அதிரடி ஆட்டம் காட்டிய ரோஹித் ஷர்மா 124 ரன்களும் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

கடைசியாக 42.5வது ஓவரில் வெற்றி இலக்கான 243 ரன்களை எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரை இந்தியா வென்றது.

இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரில் முதல்தர வரிசையை இந்தியா தக்கவைத்துள்ளது. ஆட்ட நாயகனாக ரோகித் ஷர்மாவும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வாகியுள்ளனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!