இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்தியா... - VanakamIndia

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த இந்தியா…

நாக்பூர்: இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ‘ட்ரா’ ஆன நிலையில், இரண்டாவது போட்டி நாக்பூரில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் இலங்கை 205, இந்தியா 610/6 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, மூன்றாம் நாள் முடிவில், ஒரு விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே (11), திரிமான்னே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணியின் கருணாரத்னே (18), திரிமான்னே (23) ரன்களில் வெளியேறினர். அடுத்த வந்த மாத்யூஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு இஷாந்த் பந்தில் டிக்வெல்லா (4) அவுட்டானார். அஷ்வின் ‘சுழலில்’ ஷனாகா (17), தில்ருவான் பெரேரா (0), ஹெராத் (0) சரணடைந்தனர். பொறுப்பாக ஆடிய கேப்டன் சண்டிமால் அரை சதமடித்தார். இவர், 61 ரன்கள் எடுத்திருந்த போது உமேஷ் யாதவ் பந்தில் ‘பெவிலியன்’ திரும்பினார். அஷ்வின் ‘சுழலில்’ கமகே (0) போல்டானார்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 166 ரன்களுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 4, இஷாந்த், உமேஷ், ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட், டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வரும் டிச. 2ல் துவங்குகிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!