டி20: ஆண்டின் இறுதி போட்டியை வெற்றியோடு முடித்து வைத்த இந்தியா! - VanakamIndia

டி20: ஆண்டின் இறுதி போட்டியை வெற்றியோடு முடித்து வைத்த இந்தியா!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி வீரர்கள் ஆரம்பம் முதலே திணறி வந்தனர்.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதிகபட்சமாக குணரத்னே 36 ரன்களும், ஷனகா 29 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிக் கனியை பறித்தது. 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் 18 ரன்களும், டோனி 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

2017 ஆம் ஆண்டின் இறுதி போட்டியை வெற்றியோடு முடித்து வைத்தது இந்திய அணி.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!