India won series against South Africa

தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா!

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் செய்ண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது.

டாசில் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ராம் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 48 ரன் சேர்த்தனர். தவான் 34 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் பெலுக்வாயோ வசம் பிடிபட்டார்.

அடுத்து ரோகித்துடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்தது.

கோஹ்லி 36 ரன், ரகானே 8 ரன் எடுத்து பரிதாபமாக ரன் அவுட்டாகினர்.
இந்த நிலையில், ரோகித் – ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது.

நடப்பு தொடரில் தொடர்ச்சியாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்து தடுமாறி வந்த ரோகித், உறுதியுடன் விளையாடி சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 17வது சதமாகும். ரோகித் 115 ரன் எடுத்து என்ஜிடி வேகத்தில் விக்கெட் கீப்பர் கிளாசன் வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே வெளியேற, ஷ்ரேயாஸ் அய்யர் 30 ரன் எடுத்து என்ஜிடி பந்துவீச்சில் கிளாசனிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் என்ஜிடி 4. ரபாடா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா ஆட்டத்தை தொடங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் மார்க்ராம்-அம்லா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தது. 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த டுமினி, அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் மில்லருடன் ஜோடி சேர்ந்த அம்லா சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.

இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. மில்லர் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சகாலின் அசத்தலான சூழலில் போல்டாகினார்.

இதனையடுத்து கிளாசனுடன் ஜோடி சேர்ந்த ஆம்லா பொறுமையாக ரன் சேர்த்து வந்தார். ஆம்லா 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இதனையயடுத்து வந்த பெளுக்வயோ, ரபடா, சாம்சி, கிளாசன் ஆகியோர் குல்தீப் சூழலில் ஆட்டமிழக்க தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் 4 விக்கெட்டுகளையும், பாண்டியா, சகால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 4-1 என தொடரில் முன்னிலை வகிப்பதுடன், தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!