தவான் அதிரடியில் இலங்கையை வீழ்த்தி தொடரை தன் ஸ்டைலில் வென்றது இந்தியா! - VanakamIndia

தவான் அதிரடியில் இலங்கையை வீழ்த்தி தொடரை தன் ஸ்டைலில் வென்றது இந்தியா!

Britain Cricket – India v Sri Lanka – 2017 ICC Champions Trophy Group B – The Oval – June 8, 2017 India’s Shikhar Dhawan celebrates reaching his century Action Images via Reuters / Peter Cziborra Livepic EDITORIAL USE ONLY.


விசாகப்படினம்: இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. இதன் மூலம் மூன்று ஒரு நாள் போட்டிகள் தொடரை 2-1 கணக்கில் வென்றது இந்தியா.

கடைசி மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தனுஷ்காவும், உபுல் தரங்காவும் களம் இறங்கினர்.தனுஷ்கா 13 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

பின்னர் சமரவிக்ரமா 45 ரன்களிலும், தரங்கா 95 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதன் பின் களம் கண்ட வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்ப ஆரம்பித்தனர். கடைசியாக 44.5 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் நிதான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் தவானுக்கு கைகொடுக்க இந்திய அணியின் ஸ்கோர் எகிறியது.

சிறிது நேரத்தில அதிரடியை காட்டிய தவான் சதம் விளாசினார். இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!