டி-20 கிரிக்கெட்: ரோஹித் ஷர்மா ஆட்டத்தில் ஆட்டம் கண்டுபோன இலங்கை அணி! - VanakamIndia

டி-20 கிரிக்கெட்: ரோஹித் ஷர்மா ஆட்டத்தில் ஆட்டம் கண்டுபோன இலங்கை அணி!

இந்தூர்: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய வீரர்கள் ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி இலங்கை அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.இதனால் இந்திய அணியின் ரன்கள் அதிவேகமாக உயர்ந்தன. ரன்மழை பொழிந்த ரோகித் ஷர்மா 48 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து, டி20 போட்டிகளில் அதிவேகமாக 35 பந்துகளில் சதமடித்து டேவிட் மில்லரின் சாதனை சமன் செய்தார். ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 260 ரன்கள் குவித்தது. டி-20 போட்டிகளில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

பின்னர் இமாலய வெற்றி இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இலங்கை அணியினர் தொடக்கம் முதலே அதிரடியாய் விளையாடினர். குசல் பெரேரா 37 பந்துகளில் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தரங்கா 47 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இலங்கை அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் அபராமாக பந்து வீசி சாஹல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!