டி20 போட்டி: இலங்கையை துவம்சம் செய்த இந்தியா! - VanakamIndia

டி20 போட்டி: இலங்கையை துவம்சம் செய்த இந்தியா!

கட்டாக்: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய, ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணி வீரா் கே.எல். ராகுல் 61 ரன்களும், மகேந்திர சிங் தோனி 39 ரன்களும் சோ்த்தனா்.

இதனைத் தொடர்ந்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

இந்திய அணியின் சார்பில் சுழற்பந்துவீச்சாளா் சாஹல் 4 விக்கெட்டுகளையும், ஹா்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!