தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: தவான் விளையாடுவது சந்தேகம்! - VanakamIndia

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: தவான் விளையாடுவது சந்தேகம்!

தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட்கோலி தலைமையில் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட நேற்று இரவு தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு தங்கும் இடத்திற்கு தொடக்க வீரர் ஷிகர் தவான் இடது காலில் கட்டு போட்டபடி வந்தார். அவருக்கு இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தவான் விளையாடுவது சந்தேகம். முதல் போட்டிக்குள் அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால் முரளிவிஜய்யுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தவானின் காயம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பிசியோ தெரபி இதுவரை எந்த அறிக்கையையும் தேர்வுக் குழுவுக்கு தரவில்லை.

தற்போது அணியுடன் இணைந்து தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்று உள்ளார். ஆனால் முதல் டெஸ்டில் தவான் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!