இந்தியா ஒளிர்கிறதா... புதிய இந்தியா பிறந்து விட்டதா? - VanakamIndia

இந்தியா ஒளிர்கிறதா… புதிய இந்தியா பிறந்து விட்டதா?

இந்தியா ஒளிர்கிறது, புதிய இந்தியா பிறக்கிறது, அடுத்த வல்லரசு நாம்தான் இப்படி ஜிகால்ட்டி வார்த்தைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியாவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

விளைவு, பொது வெளியில் எப்படி அற ஒழுக்கத்தோடு நடந்து கொள்வது என்ற அடிப்படை அறிவே இல்லாத மொன்னைச் சமூகத்தை, நாம் எப்படி வளர்த்து வைத்திருக்கிறோம் என்று தெரிகிறது.

ஒவ்வொரு முறை நான் இந்தியா வரும் போதும் இம்சையாய் கருதுவது வரிசையில் நிற்காமல் குறுக்கே போகும் முரட்டு எருமை எப்படி கையாள்வது என்பதே.டில்லி விமான நிலையத்தில் ஒரு உணவக விடுதியில் சாப்பாடு வாங்க பணம் கொடுக்க நின்று கொண்டு இருந்தேன். நான் ஒருவன் மட்டுமே நின்றுக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு பின்னால் ஒரு நிமிடம் கூட நிற்கும் பொறுமை இல்லாமல், நான் பேசிக்கொண்டு இருக்கும் போதே கல்லாவில் இருப்பவரிடம் நேராக பணத்தை நீட்டி அவருக்கு உணவை கொடுக்கச் சொல்லி கேட்டார். நான் ஒருவன் அங்கு நிற்பதையே அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
அட எருமை மாடே என காதில் ஒரு அறை விடும் அளவிற்கு கோபம் வந்தது.

அதே போல் லிப்ட் வாசலை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்து வெளியே வருபவனை தள்ளிக் கொண்டு ஏறுவது, வாகன டோல்கேட்டில் வரிசையாக நிற்கும் வாகனங்களுக்கு இடையில் உள்ளே புகுவது என இந்த எச்சத்தனம் நீண்டு கொண்டே போகும்.

முதலில் நாம் குடிமை ஒழுக்கத்தைச் சொல்லித் தர வேண்டும்.

– முனைவர். சுதாகர் பிச்சைமுத்து

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!