India becomes No 1 team in Test and ODI format

டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியானது இந்தியா!

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி இன்று உலகிலேயே முதல் நிலை அணியாகத் திகழ்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் அசைக்க முடியாத இடத்தில் உள்ள இந்திய அணி, இப்போது தென் ஆப்ரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்றதன் மூலம் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது.

ஐசிசி தரவரிசைப்படி, டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்திலும் தென் ஆப்ரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் இந்தியா முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடம் இங்கிலாந்துக்குக் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கு மூன்றாவது இடம்தான். ஆனால் தென் ஆப்ரிக்காவுடனான டி20 தொடரை வென்றால் முதலிடத்துக்கு வரும் வாய்ப்பு உள்ளது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!