India And South Africa 4th oneday match

ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்காவை பழி தீர்க்குமா இந்தியா?

போர்ட் எலிசபெத்: தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து தற்போது 6 ஒருநாள் போட்டியில் தற்போது தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடி வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்-வொர்த் முறைப்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதனால் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இந்திய அணி நாளைய ஆட்டத்தில் வென்று தென்ஆப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்குமா? என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி நல்ல ஒரு பாஃர்மில் தான் இருக்கிறார். 4 போட்டியில் இரண்டு சதங்களை கண்டுள்ளார். வேகப்பந்தில் புவனேஷ்வர் குமார், பும்ரா உள்ளனர். பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு கிடையாது.

தொடரை இழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா அணிக்கு நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமே. கடந்த போட்டியில் மில்லர், புதுமுக வீரர் கிளாசன் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி தொடரை வென்று சாதனை படைக்குமா என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!