தனுஷுக்காக மாரி2 படத்தில் பாடிய இசைஞானி! - VanakamIndia

தனுஷுக்காக மாரி2 படத்தில் பாடிய இசைஞானி!

 
 
சென்னை: தனுஷ் நடித்த மாரி படத்தின் 2ம் பாகம் மாரி 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. மாரி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மீண்டும்  தனுஷை இயக்குகிறார்.
 
வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவனின் இசையில் இசைஞானி இளையராஜா மாரி2 படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளார்.
 
 
இந்த பாடல் பதிவு  பற்றி தனுஷ் ட்வீட் செய்துள்ளார் ‘ மாரி2 படத்திற்காக மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சார் ஒரு பாடலை இன்று பாடியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என்ன ஒரு அற்புதமான தெய்வீக அனுபவம். நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்கிறோம். மிகவும் சிலிர்ப்பாக் உள்ளது’ என்று ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இன்னொரு ட்வீட்டில்,  “பிரதர் பாலாஜி மோகன். உங்களுக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று இளையராஜவுடன், யுவன், தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை வேட்டி சட்டையில் இளையராஜாவுடன் மிகவும் அடக்கத்துடன் தனுஷ் நிற்கிறார்.
 
இன்னொரு படத்தில் இளையராஜா சோபாவில் அமர்ந்திருக்க, அவருக்கு அருகே தரையில் தனுஷ் இருக்கிறார். 
 
 
 
Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!