if-rajini-is-hindutva-man-who-is-alagiri

முக ஸ்டாலினுக்கு போட்டி என்பதால் ரஜினி இந்துத்துவவாதியா… அப்ப முக அழகிரி யாரு?

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, சமூகத் தளங்களில் ட்ராபிக் கடுமையாக அதிகரித்து விட்டதாம். எங்கு பார்த்தாலும் ஒரே அவதூறாம். பதிலுக்கு ரஜினி ரசிகர்களும் வெளுத்து வாங்குவதால், சமூத் தளங்கள் சூடாகிப் போய் கிடக்கின்றன.

சரி, ரஜினியை எதிர்ப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால், திமுகவினர், திமுக அனுதாபிகள், பெரியாரிஸ்டுகள் ஒரு பக்கம். நாம் தமிழர் சீமானின் தம்பிகள் இன்னொரு பக்கம். ரஜினி பத்தி மீம்ஸ் போடுவதற்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப் படுகிறதாம். அதனால ரொம்ப க்ரியேட்டிவா யோசிக்கிறாங்க போலிருக்கு.

சிலவற்றை கேட்கவே காது கூசுகிறது. பார்க்க கண்கள் கூசுது. ரஜினியோ எதிர்ப்பு தான் மூலதனம். நல்லதை யோசியுங்கள் நல்லது நடக்கும்ன்னு ரசிகர்களுக்கு ஆன்மீக பாடம் எடுத்துட்டு போயிட்டார். ஆனாலும், பாவம் ரசிகர்களால் சும்மா இருக்க முடியாமல் பதிலுக்கு பதில் செய்றாங்க.

அமெரிக்கா மாதிரி வெளிநாட்டுலே இருந்தும் அவதூறா பரப்புறாங்களாம். சீனியர் பத்திரிக்கையாளர்கள் பேசிக் கொண்டதாக எடிட்டர் சொன்னார். அங்கே போயுமா அவதூறுப்பா? அப்புறம் படிச்சி பெரிய வேலைக்கு போய் என்னடே பிரயோசனம்?

நாம ஒன்னும் ரஜினிக்கு ஓட்டு கேக்கும் கூட்டணி கட்சி இல்லீங்க. ஆனாலும் ஒரு மனுசன் அரசியலை தூய்மைப் படுத்தனும்ன்னு சொல்றாரு. மாற்றம் கொண்டு வரணும்னு சொல்றாரு. குறைஞ்ச பட்சம் அவரு என்ன தான் சொல்றாருன்னு முழுசா கேக்கவாது செய்யவேண்டாமா?

அரசியல்ன்னா எதிர்ப்பு இருக்கத் தான் செய்யும். அவர் கொள்கைகள் என்னன்னு கேளுங்க. முக்கியப் பிரச்சனைகளில் அவருடைய நிலைப்பாடு என்னன்னு கேளுங்க.அதெல்லாம் நியாயம். அதை வுட்டுட்டு, அசிங்கமா பேசுறதும், எழுதுறது, மீம்ஸ் போடுறதும் யாருக்குடே லாபம்?

நானும் ஒரு வீடியோ பார்த்தேனுங்க. 25 வயசுப் பையன் மாதிரி தெரிஞ்சாரு. அவரு சொல்ற விஷயத்தைப் பார்த்தா சீமானுக்கு தம்பி மாதிரி தான் இருந்துச்சு. ஆனா அம்பேத்கார் பத்தியும் ஒரு வரி சொன்னார். அதனால திமுகவோ, விசிகவோ இருக்குமோன்னு தோனுது. ரஜினி இந்துத்த்வவாதியாம். பாஜகவின் ஏஜெண்டாம். ரஜினி பத்தி அவரு பேசுன ஒவ்வொரு வார்த்தையும் தமிழில் அசிங்கமான வார்த்தைகள்.

இவரு இப்படின்னா இவங்க ஆட்சியிலே எப்படி நாடு நல்லா இருக்கும். முக்கியமா அந்தத் தம்பியைப் பத்தி ஒன்னு சொல்லனும். இந்துத்துவா இந்துத்துவான்னு ரஜினியை குத்தம் சொன்ன அவரு நெத்தியிலே சந்தனமும் குங்குமுப் பொட்டும் ஜொலித்தது.

என்ன ஒரு வேடிக்கை பாருங்க.. தான் தினமும் வைக்கும் சந்தனமும் குங்குமுமம் இந்து மத வழிபாடுக்குரியது என்பது கூட தெரியாம பேசுறாரு. சங்கத்தமிழன் பொட்டும் வைக்கல்ல. குங்குமமும் கண்டு பிடிக்கல்லேன்னு தெரியாமலே, தமிழன் தமிழன்னு சொல்லிகிட்டு ரஜினியை இந்துத்துவவாதின்னு நாக்கூசாம திட்டுறாரு.

சமூகத்தளத்தை பார்க்கும் போது ஒன்னு தெரியுதுங்க. முக.ஸ்டாலினின் முதல் அமைச்சர் கனவை ரஜினிகாந்த் தகர்த்துட்டார். அந்த கோபம் ஒவ்வொரு திமுக காரங்ககிட்டேயும் தெரியுது. அவங்க சொல்ற ஒரே குற்றச்சாட்டு. ரஜினிகாந்த் பாஜக ஏஜெண்ட், இந்துத்துவாதி.. திமுகவை ஆதரிக்கும் போதும் இதே ஆன்மீக வாதி தானே ரஜினி. அப்போ எல்லாம் அவரு இந்துத்துவவாதி கிடையாதா?

அதாவது ஸ்டாலினை அரசியலில் எதிர்ப்பதால் இப்போது ரஜினிகாந்த் இந்துத்துவவாதி ஆகிவிட்டார்.அப்போ ஸ்டாலினை ரொம்ப நாளாவே எதிர்த்துக் கொண்டிருக்கும் முக. அழகிரி யாருங்க? அவரும் பாஜக ஏஜெண்டா? இந்துத்துவவாதியா?

யாராவது திமுக கட்சிக்காரங்க சொன்னாங்கன்னா நாமளும் தெரிஞ்சிக்கலாம்.

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!