I will help to Thalaivar Rajinikanth as his party cadre, says Vishal

‘தலைவன் ரஜினி… அவரது தொண்டன் நான்… அவருக்காக ரோட்ல இறங்குவேன்!’- அப்டி போடுங்க விஷால்


சென்னை: தலைவர் ரஜினிகாந்துக்கு தொண்டனாக ரோட்ல இறங்கிப் போய் பிரச்சாரம் பண்ணுவேன் என்று நடிகர் விஷால் அதிரடியாகக் கூறியுள்ளார்.

டிசம்பர் 31-ம் தேதி அரசியல் அறிவிப்பு, புத்தாண்டில் ரஜினி மன்றம் இணைய தளம் மற்றும் செயலி அறிவிப்பு, அடுத்த நாளே செய்தியாளர் சந்திப்பு, நேற்று கருணாநிதியுடன் சந்திப்பு, இன்று ஆர்எம் வீரப்பனிடம் ஆசி பெற்றது என அதிரடி கிளப்பி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இந்த நிலையில் திரையுலகிலிருந்து அவருக்கு பல ஆதரவுக் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. மூத்த கலைஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் ரஜினியை வாழ்த்து வரவேற்றுள்ளனர். இதில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால்.

ரஜினியின் அரசியல் குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்,” என்றார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!