ரஜினி சொன்னது போல் எதிர்மறை செய்திகளை தவிர்ப்பது எப்படி? - VanakamIndia

ரஜினி சொன்னது போல் எதிர்மறை செய்திகளை தவிர்ப்பது எப்படி?

ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது பற்றி உறுதியாக முடிவு தெரிவித்த பிறகு சமூகத் தளங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. ஃபேஸ்புக் நண்பர்களிடையே சண்டைகள் ஏற்படுகிறது. ரஜினிக்கு எதிராக பலரும் பல்வேறு வித கருத்துக்களையும் மீம்ஸ்களையும், ஆபாசமான வார்த்தைகளில் பதிவு செய்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் கடந்த சில நாட்களாக ரஜினியைப் பற்றிய அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப் பட்டு வருகின்றன. இதைப் பார்க்கும் ரஜினி ரசிகர்களின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன.

அனைவருக்கும் மாற்று கருத்து இருப்பது இயல்பே. ரஜினியைப் பிடிக்காதவர்களுக்கும், அவர் வரமாட்டார் என்று நினைத்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. ரஜினியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், எதிர்பார்க்காமல் வந்த பேரிடியாக அவர்களுக்கு இருக்கிறது.

நாகரீகமாக எதிர்ப்பு தெரிவிக்க தெரியாதவர்கள், அவதூறாக, அநாகரீகமாக எதைஎதையோ எழுதுகிறார்கள்.மீம்ஸ்கள் பகிர்கிறார்கள். அத்தகைய நண்பர்களுடன் நீங்கள் unfriend எல்லாம் செய்யத் தேவையில்லை. கொஞ்ச நாளைக்கு unfollow பண்ணிவிடுங்கள். அது போல் அவர்களிடம் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். அவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். எனவே இது பயனற்ற விவாதம்.

இறுதியில் நல்ல நட்பு தான் கெடும். ரஜினி உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப் போல் உங்கள் நண்பர்களும் முக்கியம் தான். ரஜினியின் கொள்கைகள், திட்டங்களைப் பார்த்த பிறகு புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்போதும் புரிந்து கொள்ளாதவர்களைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள்.

உங்களைக் கோபப்படுத்தும் மீம்ஸ் பக்கங்களை, யோசிக்காமலேயே unlike பண்ணி விடுங்கள். நண்பர்கள் Like செய்வதால் வரும் மீம்ஸ் பக்கங்களை All from *** என்பதை தேர்வு செய்து விடுங்கள்.

உங்களை கோபப்படுத்தும் மன உளைச்சல் தரும் வாட்ஸ் அப் க்ரூப்பிலிருந்து தற்காலிகமாக விலகி விடுங்கள். இவைகள் உங்கள் எதிர்மறை எண்ணங்களை விலக்கும்.

ரஜினிக்காக, உங்களுடன் நீண்ட நாட்கள் நட்பில் இருக்கும் நண்பர்களை ஒருபோது சண்டை போடாதீர்கள். அவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். இதை ரஜினியே விரும்ப மாட்டார்.

நேர்மறை(Positive) எண்ணங்களுக்கு பலன் அதிகம். நேர்மறையாகச் சிந்தியுங்கள் அதன் பலனை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.

நல்லதையே நினையுங்கள்.. நல்லதே நடக்கும்

– கிரி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!