ஹூஸ்டன் மீனாட்சி ஆலயத்தில் நவம்பர் 23ம் தேதி மகா கும்பாபிஷேகம்! - VanakamIndia

ஹூஸ்டன் மீனாட்சி ஆலயத்தில் நவம்பர் 23ம் தேதி மகா கும்பாபிஷேகம்!

 

 
ஹூஸ்டன்(யு.எஸ்): அமெரிக்காவில் உள்ள பழமையான இந்துக் கோயில்களில் ஒன்றான ஹூஸ்டன் மீனாட்சி ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவில் வளாகத்தில் நடைபெற்று வந்த பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்ததை ஓட்டி இந்த மகா கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  கடந்த புதன்கிழமை தொடங்கி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 
 
 
சனிக்கிழமை முதல் ஆறு நாட்கள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. ஹூஸ்டன் இசைப்பள்ளிகள், நடனப்பள்ளிகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திவ்ய பிரபந்தம், திருவாசகம் பாடப்பட்டது.  உள்ளூர் கலைஞர்களின் நடனங்களும் இடம்பெற்றது.
 
செவ்வாய்கிழமை மாலை 6:30 மணிக்கு வீரமணி ராஜுவின் இசைக்கச்சேரியும், புதன்கிழமை இரவு 7 மணிக்கு ஷோபா ராஜூவின் இசைக்கச்சேரியும் நடைபெற உள்ளது.
 
வியாழக்கிழமை, நவம்பர் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. 9:45 மணி அளவில் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடந்து சிறப்பு வழிபாடுகள் 1 மணி வரையிலும் இருக்கிறது.
 

 
மதியம் 1 மணி அளவில் பேராசிரியர் கு.ஞானசம்மந்தன் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகிறார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ மீனாட்சி டெம்பிள் சொசைட்டி சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் நாள் என்பதால், வியாழன்,வெள்ளி, சனி , ஞாயிறு தொடர் விடுமுறையாக இருக்கிறது. வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களும் பங்கேற்க வசதியாக இருக்கும் வகையில்  இந்த கும்பாபிஷேகம் அமைந்துள்ளது
 
– வணக்கம் இந்தியா செய்திகள்
 
 

 

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!