ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் அமெரிக்க பக்தர் ராம்நாத் சுப்ரமணி! - VanakamIndia

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் அமெரிக்க பக்தர் ராம்நாத் சுப்ரமணி!

ஹூஸ்டன் மீனாட்சி கோவில் மகா கும்பாபிஷேகத்தின் போது அனைவரது கவனத்தையும் அமெரிக்கர் ஒருவர் ஈர்த்தார். புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 63 நாயன்மார்கள் மண்டபத்திற்கு அருகே அமர்ந்து, அவருடைய கிடாரையும் இசைத்துக் கொண்டு நமச்சிவாய நாமாவளியும் நாயன்மார்கள் நாமாவளியும் பாடினார். நெத்தி நிறைய விபூதிப் பூசிக்கொண்டு, தலையில் கர்சீப் கட்டிக் கொண்டு, கிடாருடன் அவர் பாடியதைப் பார்க்க பரவசமாக இருந்தது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த பக்தர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.

அவருடன் கலந்துரையாடிய அமெரிக்கத் தமிழர் அன்புவிடம், மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.ராம்நாத் சுப்ரமணி என்று பெயரை மாற்றிக் கொண்ட அவருக்கு தமிழில் பேசுவதற்கு இயலவில்லை. ஆனால் பல வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார். அனுமன் நாமாவளியும் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். வீட்டில் நாள் தோறும் இசைத்து அதைப் பாடுவாராம். இவருடைய மனைவியின் பெயர் பவானி. இருவரும் இந்து மதத்தை தழுவிக் கொண்டனர். இருவருக்கும் ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொரு முக்கிய விழாவின் போதும் கோவிலுக்கு வந்து பாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ராம்நாத் சுப்ரமணி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!