9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் - 2 தேர்வு முடிவு... இன்று வெளியானது! - VanakamIndia

9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் – 2 தேர்வு முடிவு… இன்று வெளியானது!

சென்னை: கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது.  தமிழகத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்பட்டது.

புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள்.

www.tnresults.nic.in 
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in

ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் செல்போனில் குறுஞ்செய்தியின் மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்பட்டது.

மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!