Happy Valentines Day

என்றென்றும் காதல்.. காதலர் தின வாழ்த்துகள்!

ஆணின் உலகில் மனைவியும் குழந்தைகளும் ஒரு அங்கம், ஆனால் அந்த ஆணின் மனைவிக்கோ உலகமே கணவனும் குழந்தைகளும்.

இவளுக்கு என்ன தெரியும் தனது அலுவலும் அது சார்ந்த பிரச்சனைகளும் என ஒரு ஆணின் இறுமாப்பும் , உன் அலுவல் உன் பிரச்னை என தாமரை இல்லை தண்ணீராக மனைவியும் இருப்பதும், தனது மனைவிக்கு தெரிந்த இரண்டு விஷயங்கள் தனக்கு உதவும் என்பதை அறியவிடாமல் தடுக்கும். ஆயிரம் உலக விஷயங்கள் தெரியும் என்ற கணவனின் அகம்பாவம் இன்றைய குடும்ப பிரச்சனைகளின் ஆணிவேர் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகரித்து வரும் மணமுறிவு வழக்குகளும்.

அலுவல் சூழலின் அழுத்தங்கள் அடுத்த நாளைய பணிசுமைகள் அழுத்த வீடு திரும்பும் கணவன், அழுத்தங்களின் வடிகாலாக இல்லாளுக்கு இருக்கின்றதா என்பதை கூட அறிந்துகொள்ளாமல் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக உணவருந்தி செல்ல, மனம் சாலியாமல் இருப்பதை உண்டு அடுத்த நாளுக்கான ஆயத்தங்களை செய்துவிட்டு துயில செல்ல, அந்நாளைய மனசோர்வுகளுக்கு காமத்தை வடிகாலாக கொண்டு கனவுகளுடன் கணவன் காத்திருக்கும் வேளையில், அதிகாலையில் தொடங்கிய குடும்ப கடமைகள் இமைப்பொழுதும் ஓய்வில்லாமல் தொடர இரவு படுக்கையில் அசதியுற மனைவி சாய, அதையுணர்ந்த அருமை கணவன் அன்பும் பாசமும் மேலிட காம உணர்வை காதல் உணர்வு வெற்றிகொள்ள தலையை வருடி நாளைய இரவு நமக்கானதாகட்டும் என்றெண்ணி தன்னிடத்தில் உறங்க செல்வது அறமும் காதலும் ஒருங்கிணைந்த இல்வாழக்கை.

கணவன் மனைவியாகவே இருந்தாலும் நூலிழை இடைவெளியும் பரஸ்பர மரியாதையும், மனமுறனற்ற கருத்து பரிமாற்றங்கள் அதை தொடர்ந்து ஒருமித்த கருத்தொற்றுமைக்கு வருவதும் அன்பான பாசமிகுந்த காதல் வாழ்க்கையை நீட்டிக்கும்.

இந்நாள் தம்பதிகளுக்கும் வருங்கால தம்பதிகளுக்கும் இந்த ஒரு நாள் மட்டுமல்ல ஆயுள்காலம் முழுவதும் காதலுடன் வாழ வாழ்த்துக்கள் .

– குமார் துரைசுவாமி

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!