ஹைக்கூ: நாட்டு நடப்பு.. பழமொன்றியு ! - VanakamIndia

ஹைக்கூ: நாட்டு நடப்பு.. பழமொன்றியு !

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவியை மனையில் வை
யானைகளுக்கு புத்துணர்வு முகாம் !

சேவலும்
முட்டையிடும்
அரசியல்வாதியிடம் !

உலக ரவுடி அமெரிக்காவை
மிரட்டும் ரவுடி
வடகொரியா !

அரிது அரிது
மானிடராய்
வாழ்வது அரிது !

அடிக்கும் கை
வேண்டாம் அணைக்க
குடிகாரன் !

ஓய்வதில்லை அலைகள்
அழிவதில்லை நினைவுகள்
காதல் !

பொய்
அம்மியும் பறக்கும்
ஆடிக்காற்றுக்கு !

இந்தப் பூனையும்
பால் குடிக்குமா ?
சாமியார்கள் !

உதட்டிலே உறவு
நெஞ்சிலே பகை
அரசியல் கூட்டணி !

வழக்கொழிந்ததால்
வந்தன நோய்கள்
கல் உப்பு !

ஒரு பானை பால்
தயிராக
சில துளி உறை மோர் !

விடியும்போது விடியட்டும்
ஊதும் சங்கை ஊதிடும்
அறவோர் !

கூத்தாடிகள் இரண்டுபட்டால்
கொண்டாட்டம்
மக்களுக்கு !

எட்டாத பழத்திற்கு
கொட்டாவி விடும்
நடிகர்கள்

– கவிஞர் இரா .இரவி !

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!