Gurumurthy statement about ADMK leaders

ஆண்மையா? ஆற்றலா? அதிமுகவினரின் கோபமும் கொஞ்சலும்..

நம் சமூகம் இருக்கிறதே எனக்கு எப்போதுமே அது பிரமிப்பைக் கொடுக்கத் தவறியதே இல்லை. உதாரணத்திற்கு குருமூர்த்தி விவகாரம். ஆற்றல் இல்லாதவர்கள் என அவர் சொன்னது ஆண்மை இல்லாதவர்கள் என புரிந்துகொள்ளப்பட்டு ஆட்சியாளர்களை கோபம் கொள்ள வைத்துவிட்டது.

உண்மையில் ஆண்மையில்லாதவர்கள் என்ற பதத்தை விட ஆற்றல் இல்லாதவர்கள் என்கிற பதம்தான் கேவலமானது. ஆண்மை என்பது நம் கையில் இல்லை. அது ஏதோ நம்மை மீறிய இயற்கை பிரச்சினையால் கூட வரலாம். அது இல்லையென்றாலும் அதொன்றும் மானம் போகிற, வாழவே தகுதியற்ற நிலை எல்லாம் இல்லை.

ஆனால் ஆற்றல் என்பது நாம் வளர்த்துக்கொள்வது. அது நம் தகுதி. அது இல்லையென யாரேனும் சொன்னால்தான் நாம் கோபப்படவேண்டும், நிரூபிக்க எத்தனிக்க வேண்டும்.

ஆனால் ஆண்மையில்லை எனச் சொன்னால் வரும் கோபம், ஆற்றலில்லை எனச் சொன்னால் இங்கே வருவதில்லை. “நான் ஆண்மையில்லைனு சொல்லலப்பா, ஆற்றலில்லைனுதான் சொன்னேன்,” என அவர் விளக்கம் கொடுத்தவுடன், “அதான பார்த்தேன். நீ நம்மாளாச்சே… அப்படியெல்லாம் பேச மாட்டியேனு நினைச்சேன். ஆற்றலில்லைனு சொன்னா பரவால்லப்பா..” எனச் சொல்லி ஏற்றுக்கொள்கிறார்கள்.

நான் பலமுறை சொல்லியிருப்பதைப் போல இந்த நாட்டின் அடிப்படை அரசியலே தவறாக இருக்கிறது. அதை மாற்றாதவரை ஒரு எழவும் மாறாது.

-டான் அசோக்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!