டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு: 26 பேர் பலி, 20 பேர் காயம் - VanakamIndia

டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு: 26 பேர் பலி, 20 பேர் காயம்

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுண்டி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ஆலயத்திற்குள் கூடியிருந்த மக்களை நோக்கிச் சுட்டுள்ளார்.

இதில், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கொல்லப்பட்டார். ஆனால் அவர் போலீசாரால் கொல்லப்பட்டாரா? அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தகவல் தெரியவரவில்லை.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஆலய பாதிரியாரின் 14 வயது மகள் அன்னாபெல் உயிரிழந்துள்ளார். 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!