அக் 4- ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட் -18 - VanakamIndia

அக் 4- ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட் -18

சென்னை: பிரான்ஸ் நாட்டின் ப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ‘ஜிசாட்-18’ செயற்கைகோள் 4-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது.

இதேபோல், ஒரு சில தொலை தொடர்பு செயற்கை கோள்களை பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவி வருகின்றனர். தற்போது தொலை தொடர்பு தகவல்களை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், “தொலை தொடர்பு வசதியை வலுப்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 404 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-18’ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கைகோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் பிரதிபலிக்கும் சோதனை, சூரியசக்தி சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடந்து வருகிறது.

தொடர்ந்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா ‘கவ்ரவ்’ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ‘ஏரியான்-5’ ராக்கெட் மூலம் வரும் 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதற்கான ‘கவுண்ட் டவுன்’ வரும் நாளை (திங்கட்கிழமை) தொடங்கும்,” என்றனர்.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!