வெனிசூலாவில் தாத்தா - பாட்டிகள் ஊர்வலம்.. தடுத்து நிறுத்திய அதிரடிப்படை போலீசார்! - VanakamIndia

வெனிசூலாவில் தாத்தா – பாட்டிகள் ஊர்வலம்.. தடுத்து நிறுத்திய அதிரடிப்படை போலீசார்!

 

கராகஸ்(வெனிசூலா): பொருளாதாரத் தேக்கத்தால் பாதிப்புள்ளாகியிருக்கும் தென் அமெரிக்காவின் வெனிசூலா நாட்டில் அன்றாடம் மக்கள் போராட்டம் என்ற நிலை நீடித்து வருகிறது.
அதிபர் நிக்கோலஸ் மடுரா வுக்கு எதிராக இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை வெவ்வேறு வடிவில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தாத்தா – பாட்டிகள் ஊர்வலம் என்று பெரியவர்கள் அரசுக்கு எதிராக ஊர்வலத்திற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

 

தலைநகர் கராகஸில் பேரன் பேத்திகளுடன் ஆயிரக்கணக்கான தாத்தா பாட்டிகள் கூடினார்கள். நகரத்தின் மையப் பகுதியில் உள்ள தெருக்களில் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

கலவரத்தை அடக்கும் அதிரடிப் படை போலிசார் களத்தில் இறக்கப்பட்டு, தாத்தா பாட்டிகளை கலைக்க முயன்றனர். மிளகுத் தூளை தூவியும், தடுப்புக் கட்டைகள் அமைத்தும் தடுத்தனர்.

மிளகுத் தூளையும், தடுப்புக் கட்டைகளையும் தாண்டி தாத்தா பாட்டிகள் ஊர்வலத்தை நடத்தினார்கள்.

பெட்ரோலியப் பொருட்களின் விலை வீழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று வெனிசூலா ஆகும். அங்கு வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதாரம் இல்லாததாலும், எல்லாமும் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் முயற்சியிலும் அதிபர் நிக்கோலஸ் ஈடுபட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றிக் கேப்ரிலெஸ் 15 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளார்.

இது பொது மக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் 97 வயது பாட்டி ஒருவரும் கலந்து கொண்டு, அதிரடிப் படை போலீசாரை அசால்ட்டாக கடந்து சென்ற புகைப்படம் நாடெங்கும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary:

Thousands of Venezuela grandparents with their grandchildren took march in the capital Caracas on Friday, opposing the President Nicolas Madura. Riot police was deployed to stop the march and sprayed pepper powder on the grandparents. Amid economic crisis, unrest prevails after opposition leader Henrique Capriles was banned from election for 15 years. Participation of a 97 year old grandmother during Friday march, took storm with her brave walk ignoring the riot police.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!