ஐபோனுக்கு போட்டியாக களம் இறக்கிய கூகுள்... வந்தாச்சு பிக்ஸல் ஸ்மார்ட்போன்! - VanakamIndia

ஐபோனுக்கு போட்டியாக களம் இறக்கிய கூகுள்… வந்தாச்சு பிக்ஸல் ஸ்மார்ட்போன்!

சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): ஹைடெக் ஸ்மார்ட்போன் வரிசையில் கூகுள் நிறுவனத்தின் ‘பிக்ஸல்’(Pixel) போன் சந்தைக்கு வந்துள்ளது.

5 இன்ச் பிக்ஸல் போன் அமெரிக்காவில் 649 டாலருக்கும் , 5.5 இன்ச் பிக்ஸல் எக்ஸ் எல் 769 டாலருக்கும் விற்பனைக்கு வந்துள்ளன.

4 GB RAM, Qualcomm Snapdragon 821 processor, fingerprint sensor 12MP Camera உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ள பிக்ஸல் ஐபோனுக்கு சரியான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முற்றிலும் புதிதாக கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது என்று, சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற அறிமுகக்கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

கருப்பு, சில்வர் மற்றும் நீல நிறங்களில் வந்துள்ள பிக்ஸல் முன்பதிவு மூலம் தற்போது கிடைக்கிறது.

பிக்ஸல் போனுடன், க்ரோம்காஸ்ட் அல்ட்ரா, டேட்ரீம் (Virtual reality headset), கூகுள் வைஃபை, கூகுள் ஹோம் ஆகியவையும் அறிமுகம் செய்ப்பட்டது.

க்ரோம்காஸ்ட் அல்ட்ரா 4K வீடியோக்களை இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பும் திறன் கொண்டது. 69 அமெரிக்க டாலர்களுக்கு கடைகளில் கிடைக்கிறது. முந்தய க்ரோம்காஸ்டை விட சற்று கூடுதல் விலை.

கண்களில் திரையுடன் தெரியக்கூடிய டே ட்ரீம் ((Virtual reality headset) தற்போது பிக்ஸல் போனில் மட்டுமே வேலை செய்யும்.

வீட்டில் வைஃபை சிக்னல் வீக்காக இருக்கும் இடங்களில் கூகுள் வைஃபை, சிக்னலை அதிகப்படுத்திக் கொடுக்கும்.

கூகுள் ஹோம், அமேசான் நிறுவனத்தின் எக்கோ வுக்கு போட்டியாக வந்துள்ளது. சுமார் 7 கோடி தகவல்களைக் கொண்ட மொபைல் விக்கி பீடியா போல் இயங்கும். எந்த கேள்வியை கேட்டாலும் அதற்குரிய பதிலைத் தரும் வகையில் இருக்கிறது. இன்னைக்கு மழை வருமா என்று கேட்டால் வானிலை அறிக்கையை சொல்லும். அதைப்போல் இன்றைக்கு என்ன ஸ்பெஷல் நியூஸ் என்று கேட்டால், அப்போதைய தலைப்புச் செய்திகளைச் சொல்லும். இன்னும் பல கூடுதல் அம்சங்களுடன் உதவியாளர் போல் உள்ளது.

ஒரே நாளில் இத்தனையும் அறிமுகப்படுத்தினாலும் பிக்ஸல் போன் பற்றி எதிர்பார்ப்புகள் தான் அதிகமாக இருக்கிறது. ஐபோன் சந்தையை அசைத்துப் பார்க்குமா பிக்ஸல்?

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!