ஜெர்மனியில் குழந்தைகளுக்கு ’ஸ்மார்ட்வாட்ச்’ தடை! - VanakamIndia

ஜெர்மனியில் குழந்தைகளுக்கு ’ஸ்மார்ட்வாட்ச்’ தடை!

பெர்லின்(ஜெர்மனி): குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச் களுக்கு ஜெர்மனி தொலைபேசி நிறுவனம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே வைத்திருப்பவர்கள் அதை அழித்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். அவர்கள் பள்ளியிலும் வெளியிலும் பத்திரமாக இருக்கிறார்களா என்று கவனிக்க முடியும் என்று தான் பெருமளவில் விற்றுத் தீர்ந்தது.

ஆனால், ஐரோப்பா முழுவதும், குழந்தைகளுக்கான இந்த ஸ்மார்ட் வாட்சுகளில் , ஹேக்கர்கள் நுழைந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்தனர். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தகவல்கள் எளிதாக மாற்றப்படுகிறது. இருப்பிடம் பற்றிய தகவல்கள் கூட மாற்றிக் காட்டப்படுகிறது போன்ற செக்யூரிட்டி குறைபாடுகள் பரவலாக இருந்துள்ளது.

BEUC என்ற ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு, இந்த ஸ்மார்ட் வாட்சுகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்திருந்தார்கள். கடைகளில் விற்கவும் அனுமதிக்கக் கூடாது என்றும் குரல் எழுப்பினார்கள். 49 பக்க அறிக்கையாக செக்யூரிட்டி குறைபாடுகளை வெளிப்படுத்தினார்கள்.

தற்போது ஜெர்மனியின் தொலைபேசி நிறுவனம், குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்களுக்கு தடை விதித்துள்ளார்கள்

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!