Fans happy to see thalaivar Rajini at Mandapam Balcony

முதல் முறையாக ராகவேந்திரா மண்டப பால்கனியில் ‘முதல்வர்’ ரஜினி!

சென்னை: தனது அரசியல் பிரவேசம் உறுதி என்ற செய்தியை அறிவித்த கையோடு, ராகவேந்திரா

மண்டப பால்கனிக்கு வந்த ரஜினிகாந்த், வெளியில் குழுமியிருந்த மக்களைப் பார்த்து

உற்சாகத்துடன் கை அசைத்து கும்பிட்டார்.

ராகவேந்திரா மண்டபத்தை இத்தனை நாட்களாகப் பார்க்கிறவர்களுக்கு அது புதிய காட்சி. அந்த முன்புற மாடத்தில் தலைவர் ரஜினி வந்து நின்று மக்களைப் பார்த்து கையாட்டி, கும்பிட்டு, காற்றில் முத்தங்களைப் பறக்க விட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அந்த காட்சியை உடல் சிலிர்க்க, மகிழ்ச்சியில் கண்கள் கலங்க, ‘தலைவா…’ என விண்ணதிர முழக்கமிட்டபடி கண்டார்கள்.

ரஜினி பால்கனியில் வந்து நின்ற நேரம் முதல் அவர் இறங்கி வந்து காரில் வீடு திரும்பும் வரை ‘முதல்வர் ரஜினி வாழ்க’ கோஷங்கள் காதுகளில் முட்டி மோதின.

-வணக்கம்இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!