Facts behind Balachander property auction issue

உண்மை தெரியாமல் பாலசந்தரை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்!?


இரண்டு நாளாக வாட்சாப்பில் தொடங்கி, ஃபேஸ்புக் முழுக்க இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் வீடு ஏலத்திற்கு போவது குறித்த செய்திதான் ஓடிக்கொண்டிருக்கிறது!

உடனே இயக்குநர் பாலச்சந்தரால் உருவாக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், பிரகாஷ்ராஜ் எல்லாம் இப்படி வேடிக்கை பார்க்கலாமா? உடனடியாக பணத்தைக் கொடுத்து பாலச்சந்தரின் சொத்தை மீட்காமல், அது பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மௌனம் சாதிப்பது குருதுரோகம் அல்லவா… என்றெல்லாம் ஆளாளுக்கு அடித்து நொறுக்குகிறார்கள்.

உண்மை நிலவரம் அதுவல்ல! பாலச்சந்தரின் மருமகன் கந்தசாமி, இருபதாண்டுகளுக்கு முன்பு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு அது. நடிகர் ஜீவன் நடிக்க ஒரு படத்தை தயாரித்திருந்தார். அந்தப்படம் இப்போதுவரை ரிலீஸ் ஆகவில்லை! அந்தப் படத்திற்காக இந்த வீட்டை வைத்து வாங்கிய கடன்தொகை அதிகமானதால், வங்கி ஏலம் விடுவதாக அறிவிதிருக்கிறதாம்!

இதை சம்பந்தப்பட்டவர்கள் மீடியாவுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கலாம்!
சொல்லாமல் விட…இயக்குனர் சிகரம் கட்டிக் காப்பாற்றிய பெயரை ஆளாளுக்கு ஏலம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!