விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு - VanakamIndia

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு

ltte-ban
லண்டன்: விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு சமர்பித்தார்.

இதனை அடுத்து தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா? என்றும் அப்படி இருப்பின் அதனை எழுத்து மூலம் அறிவிக்கும்படியும் கேட்டிருந்தது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை தடைப் பட்டியலில் இருந்து நீக்க, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் ரணில் விக்கிரமசிங்கேவின் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கக் கூடாது என்று தெரிவித்து இருந்தது. இருப்பினும் இந்திய அரசு இது தொடர்பாக எந்த நெருக்கடியும் தரவில்லை.

இதனை அடுத்து இலங்கை மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் எதிர்ப்பு இருந்தாலும் கூட, தடைப் பட்டியலில் இருந்து இவ்விரு அமைப்புகளின் பெயர்களை நீக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றிக்கை விரைவில் வெளியாக உள்ளது. இந்த முடிவுக்கு இங்கிலாந்து கட்டுப்பட வேண்டும் என்று அங்கு வாழும் தமிழர்கள் அழுத்தம் கொடுத்தால் இங்கிலாந்தும் விடுதலைப்புலிகள் மீதான தடையை விலக்கும் வாய்ப்பு உள்ளது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!