Educational Rights conference in USA

நீட் தேர்வை கண்டித்து அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பு மாநாடு.. அறிஞர்கள் பங்கேற்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உலகத் தமிழ் அமைப்பு சார்பில் வாஷிங்டன் மாநகரில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது.

நீட் தேர்வுமுறை மூலம் இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்களின் கல்வி உரிமையை இந்திய மத்திய அரசு பறிப்பதைக் கண்டித்தும், தேசிய இனங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் நீட் எதிர்ப்பு ஆய்வரங்கத்தை, இந்த மாநாட்டில் உலகத் தமிழ் அமைப்பு நடத்தியது.

மேற்குவங்காளம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சார்ந்த மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றார்கள்.

இந்தியாவிலிருந்து, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர், முனைவர் ஏ.கே.இராசன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு, மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இந்திய புள்ளியல் துறை பேராசிரியர் மருத்துவர் கார்கா சேட்டர்ஜி உத்தரபிரதேசத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர், குடிமை உரிமைகள் பரப்புனர் அஜித் சாகி, பஞ்சாபிலிருந்து எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் தரம் சிங் கொராயா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அமெரிக்காவிலிருந்து ,ஓக்லகோமா தல்சா நகரில் வசிக்கும் புற்றுநோய் அறுவை சிகிச்சை தி.பிரகதீசுவரன், மேரிலாந்து பல்கலைக்கழகம் ஆய்வு அறிஞர் முனைவர் முகமது உசைன், கலிஃபோர்னியா நிகருரிமை ஆய்வகத்தின் ஆய்வு இயக்குநர் முனைவர் மாரி சுவிக்-மைத்ரேயி. கலிஃபோர்னியா அம்பேத்கர் படிப்பு வட்டம் செயலாளர் ச.கார்த்திகேயன் ஆகியோரும் மாநாட்டில் பங்கு பெற்றார்கள்.

நீட் தேர்வு, இந்திய அரசின் கல்விக்கொள்கை, மொழிப்பாதுகாப்பு, கூட்டாட்சி, தேசிய இன உரிமைகள் குறித்தும் ஆய்வுக் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய மாநாட்டில், ஓகிப் புயலால் உயிரிழந்தோர்க்கும், நீட் தேர்வு முறையால் உயிரிழந்த இளந்தளிர் அனிதாவுக்கும் முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

“நீட் தேர்வு அரசியல் சட்டத்திற்கு எதிரானது” எனும் தலைப்பில் நீதியரசர் ஏ.கே. இராசன் சட்டச்சிக்கல்களை எடுத்துரைத்தார். “வருங்காலத் தலைமுறையினரைத் தாக்கியழிக்கும் நீட் தேர்வு” எனும் தலைப்பில் மருத்துவர் கார்கா சேட்டர்ஜி தமது ஆய்வுகளையும், எவ்வாறு கூட்டாட்சிக்கு முரணாக மத்திய அரசு தொடர்ந்து செயல்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார்

“இந்தித் திணிப்பு – வன்செயல்” எனும் தலைப்பில் பஞ்சாப் மொழிக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து எழுத்தாளர் தரம் சிங் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் “ஏற்றுக்கொள்ள முடியாத உச்ச நீதிமன்றத்தின் நீட் தீர்ப்பு” எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் அஜித் சாகி கருத்துக்களை பகிர்ந்தார்.

“மொழிச்சார்ந்த மனித உரிமைகள் – அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் முனைவர் முகமது உசைனும், “இந்திய ஒன்றியத்தின் கல்விக்கொள்கை -2016 சட்டம்: ஒரு மீள்பார்வை” என்ற தலைப்பில் ச.கார்த்திகேயனும் உரையாற்றினார்கள் முனைவர் மாரி சுவிக்-மைத்ரேயி “கலிஃபோர்னியா பாடத்திட்டச் சிக்கல்” குறித்து ஆய்வுரையாற்றினார்.

“மருத்துவர்களின் பார்வையில் மருத்துவக் கல்விக்கொள்கைகள்” குறித்து மருத்துவர் தி.பிரகதீசுவரன் தன் கருத்தைப் பதிவுசெய்தார். பின்னர் தோழர் தியாகு அவர்கள் “நீட்டை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று நாம் தமிழர்கள் அடுத்து முன்னெடுக்க வேண்டிய சட்ட, அரசியல் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.

நீட் தேர்வுக்கு எதிராக அமெரிக்காவில் நடந்த போராட்டங்கள் பற்றியும், இறையாண்மையுடன் கூடிய மாநிலத் தன்னாட்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது. “நீட் அதிகாரம்” எனும் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இன உணர்வுமிக்கப் பாடல்களைச் சிறுவர்கள் பாடினர், மேலும் தமிழின உரிமையை வலியுறுத்தும் பாடல்களுக்கு எழுச்சிமிக்க நடனமும் ஆடினர்.

இறுதியாக மாநாட்டில் நீட் தேர்வை தடை செய்யக்கோரியும், மாநிலங்களுக்கு கல்வி உரிமையை திரும்பத் தருமாறும் கோரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Senior Journalist Mr. Ajit Sahi – Educational Rights Conference – Dec 16 @ ALDIE, VIRGINIA

Educational Rights Conference Seminar Against NEET World Thamil Organization WTO

மேனாள் நீதியரசர் ஏ.கே. இராசன் அவர்களின் உரை – கல்வி உரிமை மாநாடு – Dec 16 @ ALDIE, VIRGINIA

கல்வி உரிமை மாநாடு நீட் எதிர்ப்பு ஆய்வரங்கு

Dr.Pragatheeshwar Speech Part 2-Educational Rights Conference World Thamil Organization-WTO

Dr.Pragatheeshwar Speech Part 2-Educational Rights Conference World Thamil Organization-WTO

Dr. Pragatheeshwar Speech – Educational Rights Conference – World Thamil Organization (WTO)

Educational Rights Conference by World Thamil Organization

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!