மாட்டிறைச்சி தடையை எதிர்த்து சென்னையில் போராட்டம்: திமுக அறிவிப்பு! - VanakamIndia

மாட்டிறைச்சி தடையை எதிர்த்து சென்னையில் போராட்டம்: திமுக அறிவிப்பு!

சென்னை: 1960-ல் கொண்டு வந்த மிருகவதை சட்டத்தில் திருத்தம் செய்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த வெள்ளியன்று பிறப்பித்தது மத்திய அரசு. அந்த உத்தரவின்படி, நாடு முழுவதும் இனி மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. பல கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தும் வருகின்றனர். கேரள மற்றும் கர்நாடகா அரசுகள் கடுமையான எதிர்ப்பினை நேரடியாக பதிவு செய்தன.

இன்று, தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் சில மாவட்டங்களில் ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை அன்று திமுக சார்பில் மாட்டிறைச்சி தடை அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, நாளை மறுநாள் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே காலை 9 மணிக்கு திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும். போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தலைமை தாங்குவார் என அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!