DMK Donates 1 crore Rupees for Harvard Tamil Chair

திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய்.. ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி இலக்கு எட்டும் தூரத்தில்..

சென்னை: ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்துள்ளார்.

“உலகப் புகழ் பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் “தமிழ் இருக்கை” அமைவதற்கு, தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்.

அன்னைத் தமிழுக்கு உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தில் இருக்கை அமைவது தமிழகத்தில் வாழும் ஏழரைக் கோடி தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலகநாடுகளில் எல்லாம் பரவி வாழ்ந்து வரும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் தேனான செய்தியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதிக்கும் இன்னும் 2 கோடி ரூபாய் மட்டுமே தேவை. ஏராளமானோர் நிதி வழங்கி வருகிறார்கள். விரைவில் ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிறைவேறுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அமெரிக்காவிலும் பல ஊர்களில் தமிழர்கள் தொடர்ந்து நிதி திரட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக சார்பில் வழங்கப்படும் 1 கோடி ரூபாய், நிதி இலக்கின் மிக மிக அருகாமைக்கு வழி செய்துள்ளது. வெகு விரைவில் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி முழுவதும் திரட்டப்பட்டுவிட்டது என்ற அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!