முடிவெடுத்து விட்டு ஆலோசனை கேட்கும் கணவன் - மனைவி! - VanakamIndia

முடிவெடுத்து விட்டு ஆலோசனை கேட்கும் கணவன் – மனைவி!

குடும்பத்தில் முக்கியமான விஷயங்கள் முடிவெடுக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரும் கலந்து பேசி அவரவர் ஒப்பீனியனை கூறி அதில் உள்ள நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பின் “ஓகே.. இதுதான் சரியாக இருக்கும்” என்று ஒரு முடிவெடுப்பார்கள்.

சிலர் தன் துணையுடன் எவ்வித டிஸ்கஷனும் செய்ய மாட்டார்கள். தனக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படி நடந்து கொள்வார்கள். இது போன்ற நபர்கள் தங்களின் கணவன்/மனைவிக்கு எவ்வித மரியாதையும் கொடுக்க மாட்டார்கள், இல்லத்திலும் அவர்களுக்கென்று எவ்வித உரிமையும் இருக்காது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. இவர்கள் எப்படியென்றால் இவர்களே முதலில் முடிவெடுத்து விடுவார்கள். பின் தன் கணவன்/மனைவியிடம், என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பார்கள். அந்த அப்புராணிகளும் தங்கள் கருத்தை கூறுவார்கள். இவர்களும் ச்சரி ச்சரி அப்படியே செய்யலாம் என்று மண்டையை மண்டையை ஆட்டுவார்கள்.

நம் கருத்திற்கும் வார்த்தைக்கும் மரியாதை கொடுக்கிறார் என்று அந்த அப்புராணிகள் பூரித்து போயிருக்கும் சமயத்தில், இவர்களோ தங்கள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். இப்போ அந்த அப்புராணிகளான இவர்களின் கணவன்/மனைவியின் மனநிலை எப்படி இருக்கும். என்னைப் பொறுத்த வரை இது கூட ஒருவிதமான ஸேடிஸம்தான்.

2வது பாய்ண்ட்டில் குறிப்பிட்டிருப்பவர்களின் கணவன்/மனைவியை விட இவர்களின் கணவன்/மனைவி அதிகமான வலியும் வேதனையும் சுமந்து கொண்டிருப்பார்கள்.

டிஷ்யூம் : எந்தவொரு விஷயத்திலும் நாம் ஒரு முடிவை எடுத்த பிறகு நம் துணையிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் ஒப்பீனியன் கேட்டு அவர்களை முட்டாளாக்கக் கூடாது. அவ்வளவுதான்

– சசி கலா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!