டல்லாஸில் முருகனுக்கு கந்த சஷ்டி விழா - VanakamIndia

டல்லாஸில் முருகனுக்கு கந்த சஷ்டி விழா

டல்லாஸில் உள்ள டிஎஃப்டபுள்யூ இந்துக் கோவிலிலும் கந்த சஷ்டி கொண்டாடப்பட்டது. கோவில் கட்டப்பட்டு முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆண்டு முதலாகவே இங்கு கந்த சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசை திதிக்கு மறுநாள் தொடங்கும். இவ்விழாவின் போது பெரும்பாலான முருக பக்தர்கள் ஆறு நாட்களும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவார்கள். அதே வழக்கப்படி டல்லாஸிலும் பக்தர்கள் விரதம் இருந்து வழிபட்டார்கள்.

இந்த ஆண்டு டிஎஃப்டபுள்யூ இந்து கோவிலில்(DFW Hindu Temple) கந்தசஷ்டி விழா அக்டோபர் 20ஆம் தேதி இனிதே தொடங்கியது.ஆறு நாட்களுக்கு இந்த விழா நடைபெற்றது . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்களுடன் முருகப் பெருமானுக்கு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது. ஒவ்வொரு நாள் பூஜைக்கும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவரும் ஒன்று கூடி, முருகனை புகழ்ந்து பாட்டுக்கள் பாடியும் கந்த சஷ்டி கவசம் படித்தும் மகிழ்ந்தார்கள்.

அக்டோபர் 28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சூரசமஹாரமும் திருக்கல்யாணமும் கோவிலில் காலை சுமார் 9 மணிக்கு தொடங்கியது. இருநூறுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு முருகப் பெருமானின் அருளை பெற்றனர். மதியம் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும், ஈழத் தமிழ் நண்பர்கள் மதிய விருந்து கொடுத்தார்கள்.

– சசிகலா பாலமோகன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!