டாடா நிறுவனத் தலைவர் மிஸ்திரி திடீர் நீக்கம்... இடைக்கால தலைவராக ரத்தன் டாடா நியமனம்! - VanakamIndia

டாடா நிறுவனத் தலைவர் மிஸ்திரி திடீர் நீக்கம்… இடைக்கால தலைவராக ரத்தன் டாடா நியமனம்!

டாடா நிறுவன குழும தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

சைரஸ் மிஸ்திரியை நீக்கி டாடா சன்ஸ் நிறுவன நிர்வாக குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய தலைவரை தேர்தெடுக்க புதிய தேர்வு குழுவை அமைத்துள்ளது.

இந்த தேர்வு குழுவில் ரத்தன் டாடா, வேணு ஸ்ரீநிவாசன், அமித் சந்தரா, ரோனன் சென் மாற்றும் குமார் பட்டாச்சார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2011-ல் ரத்தன் டாடா தாமாக முன்வந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து மிஸ்திரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இப்போது மிஸ்திரி நீக்கத்துக்கு காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!