Common man questions to Rajini haters

ரஜினி ஏன் செய்ய வேண்டும்? சாமானிய மக்கள் பிரதிநிதியின் சில கேள்விகள்..!

ரஜினி ரசிகனாக இல்லாமல் ஒரு சாதாரண மக்களின் ஒருவனாக சில கேள்விகள். தமிழகத்திற்கு இதுவரை ரஜினி என்ன செய்தார் என்று கேட்கும் அறிவாளிகளுக்கு, ரஜினி செய்தது ஒரு புறம் இருக்கட்டும் .

நீங்கள் கூறும் காவேரி பிரச்சனை , நெடுவாசல் பிரச்சனை , இலங்கை பிரச்சனை , விவசாயிகள் பிரச்சனைகுளுக்கு நீங்கள் இதுவரை போராடி எங்களுக்கு பெற்று தந்த தீர்வு என்ன ?

ரஜினியை 22 வருடங்களாக வருகிறேன் , வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றியவர் என்று கூறும் நீங்கள் மேற்கூறிய பிரச்சனைகளுக்கு கண்ட தீர்வு என்ன ?

நீங்களும்தான் எங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் இதை உங்களால் மறுக்க முடியுமா ?

ரஜினி என்பவர் இப்பொழுதும் நடிகர்தான். ஆனால் நீங்கள் அத்தனைப் பேரும் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியை நடத்தி வருபவர்கள்தானே! இன்று மொழியை காரணம் காட்டி அவரை எதிர்க்கும் நீங்கள் இதுவரை என் தமிழ் மொழி இந்த உலகத்தில் உயர்ந்திட செய்த முயற்சிகள் என்ன ?

எதற்கு எடுத்தாலும் போராட்டத்தில் தொடங்கி அறிக்கையில் முடிப்பீர்கள். தீர்வை கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறோம் என்ற பதில் வரும். இதைச் செய்வதற்கா உங்களை தேர்ந்தெடுத்தோம் ?

நீங்கள் இதுவரை செய்த சாதனை என்ன தெரியுமா ? ரஜினி தமிழர் இல்லை.ரஜினி கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். ரஜினிக்கு கர்நாடாகவில் கோடி கோடியாய் சொத்துள்ளது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, பொய்களைப் பரப்பியதுதான்.

இப்படி வரிசையாக ரஜினி ரஜினி என்று அவரைப் பற்றி நீங்கள்தான் பேசுகிறீர்கள். அவருடைய ரசிகர்கள் பிறந்தநாள், படவிழா என்று கொண்டாடிவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். ஆண்டு முழுவதும் ரஜினி புராணம் பாடுவது, அவரை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் நீங்கள்தான்..

காரணம் என்ன? ரஜினி என்ற மூன்றெழுத்தை உச்சரித்தால் மீடியா உங்களை அழைத்து மேடை கொடுக்கிறது.. அங்கு ஏதேதோ உளற வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம் ஏதாவது ஒரு வகையில் நானும் இருக்கிறேன் என்று உங்கள் இருப்பைக் காட்டிக் கொள்கிறீர்கள்..

ஆக, ரஜினியைப் புறம் பேசுபவர்களும், அவர் மூலம் விளம்பரம் கிடைக்கும் என்ற சுயநலத்திற்காகத்தானே ஒழிய, அவர்கள் சொல்லும் தமிழர்கள் சார்ந்த எந்த காரணமும் கிடையாது..

தெரியாமல் கேட்கிறேன்… ரஜினி தமிழர் இல்லை என்பது எங்களுக்கு தெரியாதா. இல்லை, அவர் கோடிகளில் சம்பாதிப்பது எங்களுக்கு தெரியாதா… இதைக் கூட தெரியாத அளவிற்கு தமிழக மக்களாகிய நாங்கள் முட்டாள்களா ?

அடுத்து, ரஜினி எதுவும் செய்யவில்லை!. அவர் ஏன் செய்ய வேண்டும்? நாங்கள் ஓட்டுப் போட்டு உங்களை தேர்ந்தெடுத்தது எதற்காக? அவர் செய்வதற்கு உங்களுக்கு ஓட்டு போட வேண்டுமா? இதென்ன அரசியல்?

இறுதியாக, இனி ரஜினியை நம்பினால் முட்டாள்கள் ஆவீர்கள் என்று கூறும் அறிவாளிகளே, ரஜினியை நம்பி முட்டாள்கள் ஆகிறோமோ இல்லையோ, நீங்கள் எங்களை முட்டாள்களாக ஆக்கத் துடிக்கிறீர்கள். அதில் ஒரளவு வெற்றியும் கண்டுள்ளீர்கள் என்பதே உண்மை. இனியும் எங்களை நீங்கள் முட்டாள்களாக்க முடியாது. விழித்துக் கொண்டோம்.

இனியாவது அவரை எதிர்ப்பதை விடுத்து மக்களுக்கு நன்மையை செய்யுங்கள் அதன் பிறகு நிங்கள் கூறுவதை போல் தமிழனை தமிழனே ஆளாலாம். இதன் பிறகும் ரஜினியைத் தான் எதிர்ப்பேன், அது தான் என் அரசியல் என்றால் உங்கள் அரசியல் முடிவை அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது!

வாழ்க தமிழ்மக்கள் … வளர்க தமிழ்நாடு ..

– சசி.ஜி.குமார்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!